செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

Sri Lanka Police Jaffna Sri Lanka Nothern Province Crime
By Rakesh May 02, 2026 01:29 PM GMT
Report

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வுப்பணியின் ஆறாம் நாளான இன்று (02.05.2026) சனிக்கிழமை இந்த எலும்பக்கூடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம் - 17 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம் - 17 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

எலும்புக்கூடுகளுடன் தொடர்பான மேலதிக விபரம் 

இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை | Two More Skeletons Discovered

அத்துடன், அடையாளம் காணப்பட்டவற்றில் இதுவரை 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் மூன்று எலும்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான கறுப்பு நிற மண் சேகரிக்கப்பட்டு, தற்போது உலர விடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அத்துடன், புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை | Two More Skeletons Discovered

இந்த விடயம் குறித்த உறுதியான தகவல்கள் அப்பணிகளின் பின்னரே தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வுப் பணிகள் நடைபெறாது என்றும், ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடரும் என்றும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்! 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்! 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


GalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US