முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் காயம்
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, புத்தாண்டு நாளான நேற்று(01.01.2025) இரவு முல்லைத்தீவு அளம்பில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு அளம்பில் வீதியில் உடுப்புக்குளம் பகுதியில் பெறுமதியான வாகனத்துடன் உந்துருளியில் பயணித்தவர், விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்தவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது, உந்துருளியில் பயணித்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் அதிவேகத்தில் பயணித்து இந்த விபத்தினை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றுமொரு விபத்து
இதேவேளை, புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உந்துருளியில் பயணித்தவர் மாடு ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உலகளந்த பிள்ளையார் கோவில் செல்லும் சந்திப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
றெட்பான பகுதியினை சேர்ந்த ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri