தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Shan Jun 01, 2025 03:40 PM GMT
Report

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில், இன்றையதினம் (01.06.2025) புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுப்பதற்காக இரு மாணவிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.


இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தது என்ன..

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாதெனில் புகைப்படம் எடுக்கும் நோக்குடன் கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயத்தில் உள்ள கேணியில் மூன்று பெண் மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.

இருவர் கேணிக்குள் இறங்கி நெஞ்சளவு நீருக்குள் இருந்து கொள்ள மூன்றாவது மாணவி அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். கேணியின் நீருக்குள் இருந்த படியில் இருந்தவர்கள் படியில் இருந்து தவறி நீருக்குள் விழுந்துள்ளனர். அவர்களை காப்பாற்றும் நோக்கில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவி நீருக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்ற போதும் அவர்களை நீரில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை.

கேணிப்படியில் இருந்து தவறி நீருக்குள் விழுந்தவர்களும் காப்பாற்ற முயன்ற மாணவியும் நீருக்குள் இருந்து வெளியே வரும் முயற்சியின் போது கேணியில் இருந்து நீரை வெறியேற்ற பயன்படும் துருசு கட்டிடத்தினை நோக்கி நகர்ந்துள்ளனர். புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவி துருசு கட்டிடத்தின் ஒரு பகுதியில் பிடித்து படியின் வழியில் மேலே ஏறி வந்துள்ளார்.

வந்தவர் அயலில் உள்ள வீட்டை நோக்கி உதவிக்கு வருமாறு கூவி அழைத்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்! சூடுபிடிக்கும் அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்! சூடுபிடிக்கும் அரசியல்

காணொளி பதிவு

குமுழமுனை -கொட்டுக் கிணற்று பிள்ளையார் கோவில் கேணியில் இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்புக்காக காணொளி ஓடியோ கமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேணியில் நடைபெறும் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Mullaitivu Hospital

அந்த காணொளி பதிவுகளின் மூலமே மேற்படி முன்று மாணவி தொடர்பான விடயங்களை அறிய முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேணியில் உள்ள அறிவித்தல் 

கேணியின் பிரதான வாசலில் உள்ள தூணில் கேணிக்கு வருவோர் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை குறிப்பிட்டு அறிவித்தல் ஒன்றை காட்சிக்காக ஆலய நிர்வாகத்தினர் வைத்துள்ளனர். அந்த அறிவித்தலில் கேணியில் ஆழம் எட்டு அடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேணியில் நீருக்குள் இறங்கும் போது இது தொடர்பில் கவனம் செலுத்தாதது அந்த மாணவர்கள் விட்ட தவறாக இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இந்த அனுபவத்தினை கருத்தில் கொண்டு அறிவித்தலை நன்றாக தென்படும் வண்ணம் காட்சிப்படுத்துவதோடு விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல்: ஊகி 

சந்திக்க வரச் சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற அமைச்சர் சந்திரசேகரன்

சந்திக்க வரச் சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற அமைச்சர் சந்திரசேகரன்

யாழில் ஆட்சியை கைப்பற்றவுள்ள தேசிய மக்கள் சக்தி : சந்திரசேகர் பகிரங்கம்

யாழில் ஆட்சியை கைப்பற்றவுள்ள தேசிய மக்கள் சக்தி : சந்திரசேகர் பகிரங்கம்

12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US