அநுர அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்: நடைபெறவுள்ள இருநாள் விவாதம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி, புதிய நாடாளுமன்றத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றியிருந்தார்.
கொள்கைப் பிரகடன உரை
அதனையடுத்து, நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற போது ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை குறித்து இரண்டு நாள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சியானது தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையாக இந்த விவாதத்தை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri