கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொட - மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவர்கள் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கையில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சோதனையின் போது, அந்த வீட்டின் சமையலறையில் ஆடைகளற்ற நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது இதுவரை தெரியவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
