மன்னாரில் இருந்து யாழிற்கு கொண்டு செல்லப்பட்ட ஆமை இறைச்சியுடன் இருவர் கைது
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று(30.05.2024) மதியம் பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் கடலாமை இறைச்சிகள் பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த போது கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri