முக்கிய சிறைச்சாலைகளை உலுக்கிய மோதல்கள் - நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிக்கை
குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மெகசின் சிறைகளில் மோதல்களில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறை நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட விசாரணையின் அறிக்கை பின்வருமாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யு. உட்லர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலை கலவரம்
குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் கடந்த (07) திகதி அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குருவிட்ட சிறைச்சாலையின் மோதல்களில் 13 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போது இருவர் உயிரிழந்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri