கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி(Kilinochchi) - திருவையாறு பகுதியில் 2 கிராம் 100 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவையாறு பகுதியில் நேற்று முன்தினம் (28.05.2024) சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கி இருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடந்த இரு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் சோதனையிடப்பட்ட வீட்டில் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட நான்கு பேர் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போதைப்பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (30) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |