தொடரும் சீரற்ற காலநிலை: எச்சரிக்கையுடன் வெளியான அறிவிப்பு
மகாவலி, களனி, களு, நில்வளா ஆகிய கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வான்கதவுகள் திறப்பு
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.

விமலசுரேந்திர, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர், நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam