சிவப்பு எச்சரிக்கையுடன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் காற்றின் வேகம்
அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்