கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(30.5.2026) அதிகாலை வேளையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனையின்போது, 4 கிலோ கிராம் 104 கிராம் 'குஷ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த பிரதான சந்தேக நபர் ஒருவரும், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri