திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் காணாமல் போன ஆவணம் - பெண் உட்பட இருவர் கைது..!
திருகோணமலை மாவட்டநீதிமன்றில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(29.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை மாவட்டநீதிமன்றில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற வழக்கேடு ஒன்று காணாமல் போனது தொடர்பில் மாவட்ட நீதிமன்ற பதிவாளரால் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போன வழக்கேடு ஆண் ஊழியரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது சொத்தை களவாடியமை மற்றும் உடமையில் வைத்திருந்தமை மற்றும் களவுக்கு துணை போன குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan