காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(30) வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை, சர்வதேச தலையீடு தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.
உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போன தமது உறவினர்களுடைய படங்களை தாங்கி இருந்ததோடு, ஓ.எம்.பி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை எனவும், சர்வதேச ரீதியிலான விசாரணையும் தமது காணாமல் போன உறவினர்களுடைய முடிவுமே தமக்குத் தேவையான ஒன்று எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இவர்கள் பதாதைகளையும் தாங்கியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பல்லேகம தேரர் விவகாரம்! அஸ்டமஸ்தான குழுவின் அதிரடி முடிவு - நியமிக்கப்பட்டுள்ள புதிய தேரர்
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri