ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம் - இருவர் அதிரடியாக கைது
சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தேரர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு உதவிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்ட களத்திற்கு ஒலிபெருக்கிகளையும், நீரையும் கொண்டு சென்றமை மற்றும் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் வழக்குப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நேற்று (15) இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் சோதனையை நடத்தி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கொழும்பு 10, பஞ்சிகாவத்தை வீதியைச் சேர்ந்த 61 வயதுடையவரும், 38 வயதுடையவரும் ஆவர்.
இதற்கமைய, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி, சந்தேகநபர்களும் வழக்கு ஆவணங்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.