தீவிரமடையும் ஞானசார தேரர் விவகாரம்! முக்கிய தேரர்களை அவசரமாக சந்தித்த உயர் சிறை அதிகாரிகள்
அஸ்கிரிய மகா விகாரையின் தலைமை பொறுப்பாளரான வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக பல்லேதென்ன உள்ளிட்ட உயர் சிறை அதிகாரிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.
இதன்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறும் ஸ்ரீ ஞானரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (16) அஸ்கிரி மகா விகாரையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஞானசார தேரரை விடுதலை செய்ய வழிமுறை
இதன்போது ஞானசார தேரருக்கு விடுதலை அளிக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று தேரர் சிறைச்சாலை ஆணையாளரிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிறைச்சாலை ஆணையாளர், இது தொடர்பாக இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, சிறைச்சாலை ஆணையாளர், மல்வத்த மகா விகாரையின் தலைமைப் பொறுப்பாளரான வணக்கத்திற்குரிய திப்பட்டவாவ ஸ்ரீ சுமங்கல தேரரையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, மல்வத்த மகா தேரர், துறவிகள் ஏதேனும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலோ, அவர்களுக்கென ஒரு தனி இடம் நிறுவப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
துறவிகளை தடுத்து வைப்பதற்காக தனி இடம்
மேலும், இது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்றபோதிலும், அக்கடிதம் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

துறவிகளைத் தடுத்து வைப்பதற்காக ஒரு தனி இடம் நிறுவப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் எந்தவொரு சமய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தேரர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தற்போது வரை (16) தொடர்கின்றது.
இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி