லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு பற்றாக்குறை நாளை மறுநாள் (18) சரிசெய்யப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் டொன் கொள்ளளவு கொண்ட எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் சரியான நேரத்தில் வந்து சேராமையே தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று அதன் தலைவர் சன்ன குணவர்தன கூறியுள்ளார்.
சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை
இருப்பினும், தற்போது கப்பல் வந்து சேர்ந்துவிட்டதாகவும், எரிவாயுவை இறக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சில பகுதிகளில் எரிவாயுவிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார இறுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.