இலங்கை வந்த வெளிநாட்டு பெண் மீது தாக்குதல் - சந்தேக நபர் தப்பியோட்டம்
காலி மாவட்டத்தின் ரத்கம பகுதியில் வெளிநாட்டு நாட்டுப் பெண் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இலங்கை இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, மீன்பிடிப் படகு ஒன்றை வாங்குவதற்காக பணம் வழங்கிய பெண் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 40 வயதான வெளிநாட்டுப் பெண், ரத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண் மீது தாக்குதல்
படகு ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பணத்தை பெற்ற இலங்கை இளைஞன், ஏமாற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வெளிநாட்டுப் பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில், இலங்கை இளைஞன் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri