நாமல் ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல்! பிணை உத்தரவு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
புதிய இணைப்பு
கிரிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு இன்னும் தயாரிக்கப்படாததால், அடுத்த நீதிமன்ற திகதியில் அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கிரிஸ் ஒப்பந்தம் மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக நாமல் ராஜபக்ச சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
you may like this video