ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (26) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா (Vavuniya) பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 24 வயதுடைய யுவதியும் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து நெதர்லாந்து நோக்கி செல்வதற்காக இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போலி விசாக்கள் நோர்வே பிரஜைகளினால் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri