மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது: 12 போத்தல் மதுபானம் மீட்பு
மட்டக்களப்பு - வவுணதீவில் பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று(20) காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீடுகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரை 7 போத்தல் கொண்ட 5250 மில்லி லீற்றர் மதுபானத்துடனும், 43 வயது கொண்ட பெண் ஒருவரை 5 போத்தல் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
