துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கொழும்பில் இருவர் சிக்கினர்
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலுவன வீதி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞரொருவர் உட்பட இருவர் கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருக்க உதவி செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியில் வசிக்கும் 24 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
