லொறி -முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து : ஒருவர் பலி
கொழும்புக்கு அருகே இடம்பெற்ற லொறி - முச்சக்கர வண்டி விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்து, இன்னுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்புக்கு அருகே நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (23) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மஹரகம பக்கமிருந்து வந்து கொண்டிருந்த லொறியொன்று எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முச்சக்கர வண்டியில் பயணித்த பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரது சடலம் தற்போதைக்கு களுபோவிலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
