காரைத்தீவு பகுதியில் கைதான போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
அம்பாறை - காரைதீவு பகுதியில் சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று(10.05.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அம்பாறை - காரைதீவு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போதே அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நேற்று(10.05.2026) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கைதான இரு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்போது, 70 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு சக்கரவாகனம், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்றும், சிகை அலங்காரம் தொழில் செய்பவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைதான இரு சந்தேக நபர்களும் முரணான வாக்குமூலங்களை ஏற்கனவே பொலிஸாருக்கு வழங்கி விசாரணைகளை திசை திருப்ப முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேதக நபர்கள் புத்தளம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri