ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
டித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் நேற்று(10.05.2026) மாலை பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு
குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இந்த பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறிகளாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam