பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணம், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைத் தடுக்காது என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவாதெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பிடியாணையின் பின்னணி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேனவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கபில சந்திரசேனவின் திடீர் மரணம், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைத் தடுக்காது என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவாதெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் கபில சந்திரசேனவைத் தவிர வேறு சந்தேகநபர்கள் இருப்பதாலும், விசாரணையை தொடர்வதில் எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரசேனவைத் தவிர, இச்சம்பவத்தில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் நிமல் பெரேரா என்ற நபரும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், அவர்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவர நாடுகடத்தல் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் ஹேவா தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர வழிகள் மூலம் பரஸ்பர சட்ட உதவி
இதற்காக இராஜதந்திர வழிகள் மூலம் பரஸ்பர சட்ட உதவியைப் (MLA) பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளன என்றும் மகாநாம ஹெவா கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அவர்களை திரும்பக்கொண்டுவரத்தவறினால், இறுதி முயற்சியாக, இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வழக்குத் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்ய ஏற்கனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், 5 தடயவியல் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் அவரது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகு கபில சந்திரசேனவின் மரணம் குறித்த அறிக்கையை வெளியிட ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, கபில சந்திரசேனவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் (10) பொரல்லை பொது மயானத்தில் நடைபெற்றன.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! பிரேத பரிசோதனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
you may like this
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri