பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! பிரேத பரிசோதனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து இந்த நேரத்தில் உறுதியான அறிக்கை வெளியிட முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
கபில சந்திரசேனவின் மரணம்
இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு பிறகே இவ்விடயம் குறித்து உறுதியான அறிக்கை வெளியிட முடியும். மரணம் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிரேதப்பரிசோதனை தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்பிறகு, தடயவியல் மருத்துவ அதிகாரிகள் விளக்கமளிப்பார்கள். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் அனைத்து விதமான விசாரணைகளையும் தொடங்கியுள்ளது.
கைது நடவடிக்கை
கேள்வி - பிடியாணை பிறப்பிக்கப்பட்ட உடனே நேற்று கைது செய்யப்பட்டிருந்தால், இது நடந்திருக்காதா?
பதில் - இது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏனெனில்,
பொலிஸாருக்கு இதுபற்றி நேற்று மாலை தான் தெரியவந்தது. இது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இரவுக்குள் இது நடக்கும் என்று பொலிஸார் நினைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் அவரைக் கைது செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவு இருந்த நிலையில் இது குறித்து பொலிஸ் மா அதிபரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆனால், இது குறித்து உறுதியான கருத்தைத் தெரிவிக்க இயலாது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இது குறித்து அறிக்கை வெளியிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
அதிரடி திருப்பங்களுடன் தமிழகத்தில் உருவான பலமாக அரசியல் கூட்டணி! விஜய்யின் முடிவினால் நிலைகுலைந்துள்ள கட்சிகள்..!
YOU MAY LIKE THIS VIDEO
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri