மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது
மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்படைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (20.05.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வளர்த்து வரும் இரு மாடுகளை திருடிய சம்பவத்தில் தலைமறைவாகிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 11ஆம் திகதி வீட்டை உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு பணமான 7,500 ரியால், கையடக்க தொலைபேசி மற்றும் இலங்கை பணம் உட்பட 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பணம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri