கோர விபத்தில் தம்பி பலி - படுகாயங்களுடன் அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி
ஆணமடுவ, கொட்டுக்கச்சிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கொட்டுக்கச்சி மற்றும் கச்சிமடுவ ஆகிய இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை பொசன் தினத்தை முன்னிட்டு ஆணமடுவ நகரில் நடைபெற்ற பொசன் வலயத்தை பார்வையிட்டு விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
கோர விபத்தில் தம்பி பலி
இந்த விபத்தில் புத்தளம், அட்டவில்லுவ 05ஆம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சசிந்து லக்ஷான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சகோதரர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் சுமார் 50 மீட்டருக்கும் அதிகமான தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தில் போது மோட்டார் சைக்கிளை சசிந்து லக்ஷானே ஓட்டிச் சென்றுள்ளார்.
அவரது சகோதரர் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam