திடீரென நிறுத்தப்பட்ட சுரேஷ் சலே அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகம் - வெளியான காரணம்
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே அரங்கேற்றிய 'உண்ணாவிரத நாடகம்' மருத்துவ பரிசோதனைகள் மூலம் அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்ட பின்னர் கைவிட நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஜன பலய அமைப்பு (People's Power Collective) தெரிவித்துள்ளது.
இந்த நாட்டின் அரசியலமைப்பு அரசின் கீழ் இயங்கும் 'குற்றவியல் அரசும்' அரசியல் அதிகாரக் கட்டமைப்பும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளன.
மோசமான பழிவாங்கும் வலைப்பின்னல்
இந்த ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தும் போராட்டம் நிறுத்தப்பட்டால், நாடு வரலாற்றிலேயே மிக மோசமான பழிவாங்கும் வலைப்பின்னலில் மூழ்கிவிடும் என்றும் அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் செயற்பாட்டாளரான விதர்ஷனா கண்ணங்கர இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே நேற்று பிற்பகல் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் அவர் தலைமையிலான ஒரு கும்பல், சலேயின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை தொடருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் மிகக் குறுகிய நேரத்தில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு செல்ல வேண்டியிருந்தது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தான் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி, சுரேஷ் சலே ஜூன் 6 ஆம் திகதி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
திடீரென கைவிடப்பட்ட போராட்டம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தார்.

இருப்பினும், அரசாங்கமோ அல்லது குற்றப் புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகளோ இந்த உண்ணாவிரதத்தை கட்டுப்படுத்தவில்லை.
எனவே, பெரும் குற்றங்களின் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சலே, தான் விளையாடிக் கொண்டிருந்த 'விளையாட்டு' பலனளிக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து தேசிய மருத்துவமனையில் மருத்துவக்குழுவால் அவர் பரிசோதிக்கப்பட்டபோது, கடந்த சில வாரங்களாக அவர் கடைப்பிடித்து வந்த உண்ணாவிரதம் ஒரு அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் திடீரென போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam