வேகமாக உயர்வடைந்து வரும் ரூபாவின் பெறுமதி: நிதி அமைச்சு மதிப்பீடு
வேகமாகச் சரிந்துவந்த ரூபாவின் பெறுமதி தற்பொழுது வேகமாக உயர்வடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் ஒப்பீட்டளவில் நாட்டின் நிலைமையை நோக்க வேண்டும். எவருமே நாட்டைப் பொறுப்பேற்க விரும்பாத பெரும் நெருக்கடியில் இருந்தோம்.
சம்பள உயர்வு
எந்தக் கட்சியும் நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்வரவில்லை. ஆனால் இன்று 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் கையிருப்பு தற்போது உள்ளது.
வேகமாகச் சரிந்துவந்த ரூபாவின் பெறுமதி தற்பொழுது வேகமாக உறுதியடைந்து வருகின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அரசாங்கம் 205 பில்லியன் ரூபாவை மானியங்களுக்காக ஒதுக்கியுள்ளது.
அதற்கு 65 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து வெகுதொலைவுக்கு வந்துவிட்டோம் என்பது புரிகின்றது.
வங்குேராத்து நிலையில் இருந்து மீண்டெழுந்து நாட்டில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறோம்.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |