நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Sri Lanka Police Badulla Hospitals in Sri Lanka
By Vethu May 21, 2024 11:35 AM GMT
Report

பதுளை, லுணுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது கொல்லப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான உயிரிழந்த பெண்ணின் கணவரான 45 வயதுடையவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 36 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் சிக்கிய வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் - விசாரணையில் பகீர் தகவல்கள்

கொழும்பில் சிக்கிய வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் - விசாரணையில் பகீர் தகவல்கள்

நீதிமன்றம் தடை

கொலை செய்யப்பட்டவர் சுமித்ரா தமயந்தி எனப்படும் 36 வயதுடைய தும்பபிட்டியவத்த, ஜனதாபுர, லுனுகல என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் | Husband Killed Wife Lunugala Today

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சந்தேகநபர் மனைவி பிள்ளைகள் வசிக்கும் வீட்டிற்கு வர நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரதான சந்தேகநபரின் நண்பர் என கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி முதலில் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் நேற்று இரவு லுனுகல நகருக்கு அருகில் வீதியொன்றில் இருந்து தப்பிச் செல்ல காத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குடும்பத் தகராறு

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் | Husband Killed Wife Lunugala Today

கடந்த 19ஆம் திகதி மதியம் தனது வீட்டை அடுத்துள்ள கும்புக்கன் ஓயாவுக்கு மனைவி வந்த போது, ​​முதலில் சிறு கல்லால் தாக்கியதாகவும் அதில் கீழே விழுந்த அவர் மீது பெரிய கல்லை போட்டு கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.

தலையில் பலத்த அடி மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணயின் பின்னர் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரையும் அவரது நண்பரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US