கொழும்பில் சிக்கிய வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் - விசாரணையில் பகீர் தகவல்கள்
ரஷ்யாவிற்கு கூலிப்படையாக சென்ற 120க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு வீசா பெற்றுக்கொடுக்கும் இடைத்தரகராகச் செயற்பட்ட நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளையைச் சேர்ந்த தாசன் தரிந்து என்ற 44 வயதுடையவரே அதே பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு கூலிப்படையாக சென்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சுற்றுலா விசா மூலம் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளனர்.
சுற்றுலா விசா
சுற்றுலா விசா பெறுவதற்காக இந்த கடத்தலில் இடைத்தரகராக இந்த முகவர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்டோருக்கு ரஷ்யா செல்ல விசா வசதி செய்து தருவதில் தலையிட்டது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டும் ஏராளமானோர் விசா பெற்றுக் கொண்டுள்ளனர், ஆனால் எவ்வளவு தொகை என்பது இதுவரை வெளியாகவில்லை.
ஆட்கடத்தல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் தெஹிவளையில் உள்ள முகவர் நிலையத்தை முழுமையாகச் சோதனையிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |