முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 7:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உழவு இயந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வேகமாகச் சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்பம் முற்பட்டபோது பெட்டி கழன்று புரண்டுள்ளது.

இந்த விபத்தில் உழவனூர் பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்த இளைஞனின் உடலும் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளார்கள்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam