அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Government Employee Government Of Sri Lanka
By Laksi Aug 04, 2026 12:24 PM GMT
Report

அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது.

இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

இரண்டாவது நாளாகவும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

இரண்டாவது நாளாகவும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

ஆணைக்குழு

ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயல்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Government Employees Pension Salary Issues

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருபது ஆண்டுகளுக்குப் பிறகே ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.

குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை

குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரச அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உள்ளதால், அரசு சேவையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அரச சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Government Employees Pension Salary Issues

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்த போதிலும், அதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச சேவையின் ஒரு துறையிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை மட்டும் ஆராய்ந்து தீர்க்க முயன்றால், அது மற்றொரு துறையிலுள்ள ஊழியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்ற அனுபவம் உள்ளது என்றும்

அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து முழு அரச சேவைக்கும் பொருந்தக்கூடிய விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்

மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US