உலகை உலுக்கிய இரட்டை கோபுர தகர்ப்பு நடந்து இன்றுடன் 23 ஆண்டுகள்
உலக வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் - நியூயார்க்கில் உள்ள இரட்டை உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியதன் 23ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள கோபுரம் மற்றும், பென்டகன் மற்றும் வயல்வெளியில் விமானங்கள் மோதியதில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்கு பிறகு அமெரிக்க மண்ணில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
அதிகாலை தாக்குதல்
2001 செப்டம்பர் 11 செவ்வாய்க் கிழமை காலை சுமார் 8:46 மணியளவில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 767 விமானம் 20,000 கேலன் ஜெட் எரிபொருளை ஏற்றிக்கொண்டு நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் மோதியது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் சம்பத்தில் கொல்லப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் மேல் தளங்களில் சிக்கிக்கொண்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்களில் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
பின்னர், முதல் விமானம் தாக்கப்பட்ட 17 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது போயிங் 767 - யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 175 வானத்தில் தோன்றி, உலக வர்த்தக மையத்தை நோக்கி கூர்மையாகத் திரும்பி, 60 வது மாடியில் உள்ள தெற்கு கோபுரத்தில் மோதியது.
இந்த மோதலில் அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கீழே உள்ள தெருக்களில் காணப்பட்ட வாகனங்கள் எரிந்து பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் தாக்குதல்
நியூயார்க் தாக்குதலின் சூடு தணிவதற்குள், காலை 9.37 மணிக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு மையமாக கருதப்படும் பென்டகனை தாக்க மற்றொரு விமானம் பயன்படுத்தப்பட்டது.
இந்த மூன்று தாக்குதல்களுடன் ஒரே நேரத்தில், மற்றொரு விமானம் பென்சில்வேனியாவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தை கடத்த முயன்ற அமைப்புக்கள் பயணிகள், பணியாளர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர்.
உலக வர்த்தக மையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
