தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..!
எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அசாத்திய சாதனையை பதிவு செய்திருக்கும் நிலையில், தொங்கு சட்டசபை முறைமையை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி அமைப்பது யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில், தனிக் கட்சியாக களமிறங்கி சாதனை படைத்துள்ளதாக தவெக தற்போது பார்க்கப்படுகிறது.
கூட்டணி சேரப்போவது யார்..!
அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த தலைவர்கள் கூட, தங்களது சொந்த தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்களே வெற்றியாளர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, 64 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையின் அடிப்படையில் ஆட்சிக்கு வரவுள்ள விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மற்றொரு புறம், அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், அதிமுக தலைவருக்கு வெறும் கட்சித் தலைவராக மட்டுமே இருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோன்ற தேர்தல் களம் கடந்த 1967ஆம் ஆண்டில்தான் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026