118 தொகுதிகளுடன் ஆட்சியைப் பிடிக்கும் TVK..! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அதிமுக
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தவெக அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
தவெகவுடன் முக்கிய பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளின்படி, விஜய்யின் கட்சி 98 முதல் 120 இடங்களைப் பெற்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு இணையாக இருக்கும் என்றும், திமுக காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 முதல் 32 இடங்களையும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலும் அதிமுகவே இரண்டாம் இடம் வகிக்கும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை அதிமுக ஆராய்ந்து வருவதாகவும், காங்கிரஸ் வெல்லும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே விஜயின் பங்கு அமையும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து இருதரப்பிலும் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இரு கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்ததுடன், இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரேயொரு கருத்துக்கணிப்பால், தமிழகத்தில் அரசியல் களம் மாறப்போகிறதா என்பதை இன்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
YOU MAY LIKE THIS VIDEO
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan