கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எதிர்பார்ப்பில் காங்கிரஸ்..! பல தொகுதிகளில் முன்னிலை
கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி தேவையான 71 தொகுதிகளை தாண்டி 100 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
பாஜகவின் என்டிஏ கூட்டணி பின்னடைவு
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் பிரதான அணிகளாக களமிறங்கின.
காலை 11 மணி நிலவரப்படி கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதில் காங்கிரஸ் மட்டும் 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்த கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. என்டிஏ கூட்டணியில் பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
அதிக பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90க்கும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.