இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு, துருக்கியின் சந்தைவாய்ப்புக்கள் உதவுகிறது: நஸீர் அஹமட்
இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு, துருக்கியின் சந்தைவாய்ப்புக்கள் பாரிய பங்களிப்புச் செய்வதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, துருக்கிக்கிடையிலான உறவுகளை மேலும் நெருக்கமாக்க, விரிவான ஒழுங்கமைப்புக்கள் அவசியம். தேவையான மற்றும் நெருக்கடியான நேரங்களில் துருக்கி உதவியதை, இலங்கை பெருமையோடு நினைவு கூறுகின்றது.
துருக்கி நாட்டின் 99ஆவது தேசிய தின கொண்டாட்டம்

தொழினுட்பம், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை கட்டியெழுப்பும் புதிய செயற்றிட்டங்களால், இரு நாடுகளதும் நட்புக்கள் நிலைபெறும்.
துருக்கியின் சந்தைவாய்ப்புக்கள், ஆசியாவின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. சுனாமி, கோவிட் உள்ளிட்ட இயற்கைச் சவால்களில் இலங்கையை கரையேற்ற துருக்கி அளப்பரிய சேவையாற்றியதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் 99ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்கள் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் அந்நாட்டின் தூதுவர் ஆர்.டிமெட் செக்கசியக்குலு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சபாநாயகர், அமைச்சர் அலிசப்ரி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜ
தந்திரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri