உயிரை காப்பாற்றிய இந்திய வீரருக்கு நன்றியுடன் முத்தமிட்ட துருக்கி தாய்! - நெகிழ்ச்சி தருணம்
துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய இராணுவத்தால் மீட்கப்பட்ட பின்னர் இந்திய பெண் இராணுவ அதிகாரியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படமொன்று வைரலாகியுள்ளது.
இந்திய மருத்துவக்குழுவைச் சேர்ந்த மேஜர் வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு துருக்கி பெண்மணி ஒருவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 37,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்திய இராணுவ மருத்துவர் கர்னல் யதுவீர் சிங் தலைமையில் 14 மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 86 பேர் கொண்ட மருத்துவக்குழு துருக்கி சென்று அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
