நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையரின் உடல் துருக்கியில் அடக்கம்
கடந்த 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல், துருக்கியிலுள்ள அண்டக்யா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பதினாறு இலங்கையர்களின் நலனைக் கண்டறிவதற்காக, துர்கியே அதிகாரிகளுடன் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இலங்கையர்கள் 15 பேரின் நிலைமை
அதன்படி, அவர்களில் 15 பேருடன் தூதரம் தொடர்பு கொண்டதுடன், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தூதரகம் உறுதிசெய்துள்ளது.
அதே நேரத்தில் துருக்கியில் உள்ள ஹடாய்/அன்டக்யா மாகாணத்தில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காணாமல்போன இலங்கை பெண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க இறந்தவரின் உடல் ஹடாய்/அன்டக்யாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
