யாழ். நகரப் பாடசாலையில் மாணவர்களுக்கு காசநோய்
யாழ்ப்பாணம் (Jaffna) நகரத்திலுள்ள ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு
ஏற்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த மாணவனுக்குக் காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய மாணவர்கள் சிலரைப் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆரம்ப நிலை
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு காசநோயின் ஆரம்ப நிலை காணப்படுவதுடன் உரிய முறையில் சிகிச்சை பெற்றால் ஏனையவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |