அடுத்த வாரம் வொஷிங்டனில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அடுத்த வாரம் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(28.7.2026) வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வதில் ஜெலன்ஸ்கி ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் வெள்ளை மாளிகையிடமிருந்து ட்ரம்பின் அதிகாரப்பூர்வ நேர அட்டவணை உறுதிப்படுத்தப்படுவதற்காக அவரது குழு காத்திருப்பதாகவும் உக்ரைன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பு
முன்னதாக, வலதுசாரி ஆர்வலரான லாரா லூமருக்கு அளித்த நேர்காணலில், தான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும், அங்கு ட்ரம்பைச் சந்திப்பேன் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சமீபத்தில் காலமான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கிலும் ஜெலன்ஸ்கி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு 10 முறை உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டு, உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவையும் ரஷ்யா மீதான தடைகளையும் தீவிரமாக வலியுறுத்திய லிண்ட்சே கிரஹாம், உக்ரைனின் முக்கிய ஆதரவாளராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan