ட்ரம்ப் - ஷி ஜின்பிங் இடையிலான பெய்ஜிங் பேச்சுவார்த்தை: முக்கிய முடிவுகள் மற்றும் சவால்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இரண்டு நாள் உயர்மட்ட உச்சி மாநாடு பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.
இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு வரலாற்று மைல்கல் என்று வர்ணிக்கப்பட்டாலும், பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பேச்சுவார்த்தை
பெய்ஜிங்கிலிருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இரு நாடுகளுக்கும் சாதகமான பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், சீனா தரப்பில் இது குறித்து விரிவான விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த முக்கியப் பயணத்தில் ஈலோன் மஸ்க் மற்றும் என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ட்ரம்புடன் பங்கேற்றனர்.

குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 200 விமானங்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் சிக்கல்களைக் கையாளவும், வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முறைப்படுத்தவும் ஒரு புதிய ‘வர்த்தக வாரியத்தை’ அமைக்க இரு அல்லதலைவர்களும் உடன்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில் நிலவும் போட்டிகளுக்கு மத்தியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் சிப்கள் குறித்த விவாதங்கள் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் பெற்றன.
இறுதி முடிவுகள்
அதேபோல், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சு, சர்வதேசக் கடல் வழித்தடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே தாய்வான் விவகாரம் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக அமைந்தது.
தாய்வான் விவகாரமே சீனா-அமெரிக்கா உறவில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விஷயம் என்றும், இதைத் தவறாகக் கையாண்டால் இரு நாடுகளும் நேரடி மோதலில் ஈடுபட நேரிடும் என்றும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த இறுதி முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam