பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையும் அங்கத்துவம் பெற முயற்சிக்கும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donalt Trump) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள், தமது சொந்த நாணயத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாகவே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வலிமையான, அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய lPRICS நாணயத்தை உருவாக்கப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டை இந்த நாடுகளிடம் இருந்து ட்ரம்ப் கோரியுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால், பிரிக்ஸ் நாடுகள், அமெரிக்க சந்தைகளுக்கான அணுகலை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலர்
உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை மாற்றுவதற்கு முயற்சிக்கும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை (அவற்றின் முதன்மை எழுத்துக்களால் இணைத்து பெயரிடப்பட்டுள்ள (BRICS)) முதன்மை அங்கத்துவங்களாக கொண்ட பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை இலங்கை முறைப்படி ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ரஸ்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதேநேரம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள தனது சகாக்களுக்கு பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்வதற்கான ஆதரவைக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |