யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் (Jaffna) சுதுமலையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியில் நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் (Kokkuvil) பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன்(வயது 64) என்ற பிறப்பு இறப்பு பதிவாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 7.30 மணியளவில் உயிரிழந்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் வண்டியில் வரும் போது எதிரே வந்த கார் மோதியதாலேயே இடம்பெற்றுள்ளது.
கோர விபத்து
இதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
நோயாளரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
