விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம்(Jaffna) வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
