இது தான் எங்களது நோக்கம்! ஈரானின் கொடுங்கோன்மை அடிமைத்தனம்.. பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி
ஈரானிய மக்கள் ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
x வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளியொன்றில் சினிமா இசை மற்றும் ஈரானின் சிங்கம் மற்றும் சூரியக் கொடியையும் இஸ்ரேலின் கொடியையும் அசைத்து மக்கள் ஒன்றுகூடும் காட்சிகள் உள்ளன.
ஈரானியர்களின் கையில்
அதில் நெதன்யாகு தனது நாடு "ஈரானை... கொடுங்கோன்மையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர "எழுந்து நிற்பது" இறுதியில் ஈரானியர்களின் கையில்தான் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையின் தருணத்தில் நீங்கள் எழுந்து நின்றால், இஸ்ரேலும் ஈரானும் மீண்டும் துணிச்சலான நண்பர்களாக மாறும் நாள் வெகு தொலைவில் இருக்காது என்று நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகள், நடந்து வரும் மோதல் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக பகிரங்கமாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.