ஈரான் போரில் குழந்தைகளின் மரணம்: யுனிசெஃப் கடும் கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள போரில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து யுனிசெஃப் அமைப்பின் உலகளாவிய செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் (James Elder) தனது கடும் கண்டனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மார்ச் 8, 2026 அன்று வெளியான காணொளியில் , போரின் கொடூரம் குழந்தைகளின் உயிர்களைக் கொண்டு அளவிடப்படுவது மனிதாபிமானமற்றது என்று அவர் சாடியுள்ளார்.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
168 சிறுமிகள்
கடந்த பெப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள 'ஷஜாரே தய்யேபே' (Shajareh Tayyebeh) பெண்கள் தொடக்கப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 168 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரின் முதல் ஒரு வாரத்தில் மட்டும் ஈரானில் சுமார் 180 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் யுனிசெஃப் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானில் இதுவரை 20 பாடசாலைகள் மற்றும் 10 மருத்துவமனைகள் இந்தத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன.
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
உச்சகட்டக் கொடூரம்
இது குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உரிமைகளை முற்றிலுமாகப் பறித்துள்ளதாக ஜேம்ஸ் எல்டர் சுட்டிக்காட்டியுள்ளார். "பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் சர்வதேச சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால், இங்கே அவர்கள் இலக்கு வைக்கப்படுவது போரின் உச்சகட்டக் கொடூரம்" என்று ஜேம்ஸ் எல்டர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உயிர்களைப் பலிகொடுப்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் செயல் என்று எச்சரித்துள்ள அவர், உடனடியாகப் போரை நிறுத்திப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சர்வதேச சமூகத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.