ஈரான் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டம்: நடு இரவில் தப்பியோடிய முக்கிய தலைவர்கள்
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானின் பொருளாதாரத்தில் அமெரிக்கா அழுத்தம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் வலுவான இராணுவ திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது எண்ணெய் கிடங்குகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையை கடந்து செல்லும் 60 ஆயிரம் கப்பல்கள் : போர் நீடித்தால் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஈரான் நாட்டிலுள்ள சில வணிகர்களும் அரசியல் தலைமைகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
அதேவேளை, துறைமுகங்கள், வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானை சரணடையச் செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், ஈரானின் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் அடுத்ததாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்பதைக் குறித்து “கழுகுப் பார்வை” நிகழ்ச்சி விரிவாக ஆராய்கிறது.